2009-04-06 14:58:44

வரலாற்றில் ஏப்ரல் 07


புனித பாப்பிஸ்ட் தெலசால் அருளப்பர் விழா. இவர் கிறிஸ்தவப் பள்ளிகளின் சகோதரர்கள் சபையை நிறுவியவர்.

கி.மு. 322 இல் கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் இறந்தார்.

கி.பி. 321 இல் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்ட்டைன், அவரது பேரரசில் ஞாயிறு ஓய்வு தினம் என்று அறிவித்தார்.

கி.பி. 203இல் திருமணமான பெண்களின் பாதுகாவலர்களான புனிதர்கள் பெர்பெத்துவாவும், ப்பெலிசித்தாசும், 308ல் புனித யூபுலுசும் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.

1693 திருத்தந்தை 13ம் கிளமெண்ட் பிறந்தார்.

1724 திருத்தந்தை 13ம் இன்னோசென்ட் இறந்தார்.

1798 - பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமை பெற்றார்.

1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.

1912 - தென் துருவத்தை டிசம்பர் 14, 1911 இல் தான் அடைந்ததாக ருவால் அமுன்ட்சென் அறிவித்தார்

1944 - ஈழத்து எழுத்தாளர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை இறந்தார்.

ஏப்ரல் 07 அல்பேனியாவில் ஆசிரியர்கள் தினம்.








All the contents on this site are copyrighted ©.