2009-04-06 14:52:29

ஆப்ரிக்கக் குடியேற்றதார்ரகள் கடலில் இறந்தது குறித்த திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்


ஏப்ரல் 06,2009. அண்மையில் ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்கள் மத்தியதரைக் கடலில் இறந்தது குறித்த தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை.

துரதிஷ்டவசமாக இத்தகைய சோக நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறும் வேளை, இவை குறித்து நாம் பாராமுகமாய் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஞாயிறு மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, உலகளாவிய பொருளாதார நெருக்கடியினால் இப்பிரச்சனை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடலில் பலியானவர்களுக்கு இறைவன் நிறைசாந்தியை அளிக்கட்டும் எனச் செபிக்கும் அதேநேரம், ஆப்ரிக்கர்கள், துன்பங்கள் மற்றும் சண்டைகளிலிருந்து வெளிவருவதற்கு சர்வதேச சமுதாயம் உதவும் பொழுது இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

சுமார் 250 ஆப்ரிக்கர்கள் ஐரோப்பாவில் புகலிடம் தேடிப் பயணம் செய்த படகு லிபியா நாட்டுக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் ஏறத்தாழ இருபது பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர் மற்றும் காணாமற்போயுள்ள நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.