2009-04-03 18:52:39

தோமினிக்கன் குடியரசின் வத்திக்கானுக்கான புதிய தூதரைத் திருத்தந்தை இந்த வெள்ளி காலை வரவேற்றார் 030409 .


தோமினிக்கன் குடியரசின் வத்திக்கானுக்கான தூதரைத் திருத்தந்தை இந்த வெள்ளி காலை வரவேற்று அவரது பணிக்கான சான்றுப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார் . அந்நாட்டின் தலைவர் டாக்டர் லெயோனல் அந்தோனியோ அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார் . தம் இதயத்துக்கு நெருக்கமான அந்நாட்டுத் தலைவருக்கும் , நாட்டு மக்களுக்கும் நல்லுறவுகளுக்கு நன்றி கூறி தமது மன்றாட்டுக்களையும் அந்நாட்டின் பாதுகாவலி அன்னைமரியாள் வழியாக ஆண்டவரிடம் சமர்ப்பிப்பதாகக் கூறி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.