2009-04-02 20:22:56

அமெரிக்கக் கத்தோலிக்கச் சபையில் பல்லாயிரக்கணக்கானவர் புதிய உறுப்பினர்களாகச் சேர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 020409 .


வருகிற உயிர்ப்பு விழாவன்று பிற சமயங்களிலிருந்து மதம் மாறி அட்லாண்டா மறைமாவட்டத்தின் கத்தோலிக்க சபைக்கு 2700 பேர் வர உள்ளனர் . சீயாட்டில் மறைமாவட்டம் 1200 புதியவர்களை கத்தோலிக்க சபையில் வரவேற்க உள்ளது . சாண்டீயாகோ மறைமாவட்டத்தில் 1200 பேர் சேர உள்ளனர் . கடந்த ஆண்டு 49,415 பேரும் 2007 ஆம் ஆண்டில் 87, 363 பேரும் அமெரிக்காவின் கத்தோலிக்க சபையில் சேர்ந்ததாக அந்நாட்டின் கத்தோலிக்க வழிகாட்டி கூறியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.