2009-04-01 14:44:11

தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் விலையேற்றம், வெப்பநிலை மாற்றம் ஆகியவை, ஆசிய பசிபிக் பகுதி அரசுகள் முன்வைத்துள்ள மில்லேனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்குத் தடைகளாக இருக்கின்றன


ஏப்ரல்01,2009. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் விலையேற்றம், வெப்பநிலை மாற்றம் ஆகியவை, ஆசிய பசிபிக் பகுதி அரசுகள் முன்வைத்துள்ள மில்லேனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்குத் தடைகளாக இருக்கின்றன என்று எஸ்கேப் என்ற ஆசிய - பசிபிக் பகுதிக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவை கூறியது.

இந்நெருக்கடி, ஆசிய-பசிபிக் பகுதியில் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களிலும் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அவ்வவை கூறியது.

அப்பகுதியின் வளர்ச்சி விகிதம், வளர்ந்த நாடுகளில் 1.5 விழுக்காடும், வளரும் நாடுகளில் 3.6 விழுக்காடும் குறையும் என்றும் அவ்வவை தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.