2009-03-31 14:58:10

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே ஏழைகளுக்கென வழங்கப்பட்ட அர்ப்பண வாக்குறுதிகளை உலகத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது, பிரிட்டன் மதத்தலைவர்கள்


மார்ச்31,2009. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே ஏழைகளுக்கென வழங்கப்பட்ட அர்ப்பண வாக்குறுதிகளை உலகத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது என்று பிரிட்டன் மதத்தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இலண்டனில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூடவுள்ள நிலையில் அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மற்றும் யூதத் தலைவர்கள், இன்றைய பொருளாதார நெருக்கடிகளின் அடிப்படையாக இருக்கும் ஒழுக்கரீதி கோட்பாடுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என விண்ணப்பிப்பதுள்ளனர்.

மதத்தலைவர்கள் இணைந்து வெளியிட்ட செய்தி, ஏழைகளின் தேவைகளை மறப்பது என்பது கடந்தகாலத் தவறுகளை வருங்கால அநீதிகளுக்குக் காரணமாக அனுமதிப்பதாகும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், நீதியான உலகைப் படைக்க வேண்டுமெனில் ஏழைகளின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென விண்ணப்பிக்கும் மதத்தலைவர்களின் அறிக்கைகளை கத்தோலிக்கக் கர்தினால்கள் கோர்மாக் மர்ப்பி ஒக்கானர், கெய்த் ஒ ப்ரெய்ன், ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், யூதத்தலைமைக் குரு சர் ஜோநத்தான் சாக்ஸ் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.