2009-03-30 15:23:10

மார்ச் 31 தவக்காலச் சிந்தனை நற்செய்தி யோவா. 8:21-30


இயேசு மீண்டும் அவர்களிடம், ' நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் ' என்றார். யூதர்கள், ' ″ நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது ″ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ? ' என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ' நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ″ இருக்கிறவர் நானே ″ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள் ' என்றார். அவர்கள், 'நீர் யார்?' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், 'நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.'நான் ..... சொல்லி வந்துள்ளேன்.' என்னும் சொற்றொடரை 'நான் உங்களிடம் ஏன் பேசவேண்டும்?' எனவும் மொழிபெயர்க்கலாம். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன் ' என்றார். தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ' நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ″ இருக்கிறவர் நானே ″ ; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன் ' என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நிகழ்த்தும் பல உரைகளில், குறிப்பாக அவர் இளையோருக்கென ஆற்றும் உரைகளில், ″இன்று பலர் வாழ்க்கையின் உண்மையான பொருளைத் தேடுகின்றனர்″என்பது இருக்கின்றது. திடீரென ஒருவரை நிறுத்தி உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்டால் பலநேரங்களில் பதில் மௌனமாகத்தான் இருக்கும். பட்டினத்தார் சொல்வார்-ஏதோ மனிதன் பிறந்து விட்டான், ஏனோ மரம் போல் வளர்ந்துவிட்டான் என்று. வாழ்வு சிறந்து விளங்க வேண்டுமெனில் இன்று, குறிப்பாக இத்தவக்காலத்தில், நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்கிறேன்? என்று நம்மை நாமே கேட்க வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு இக்கேள்விகளுக்கான பதில் தெளிவாகத் தெரிந்திருந்தது.








All the contents on this site are copyrighted ©.