2009-03-28 15:36:53

பிறருக்காக வாழவும் நீதிக்காகவும் நன்மைத்தனத்திற்காகவும் துன்புறத் தயாராக இருக்க திருத்தந்தை அழைப்பு


மார்ச்28,2009. இளையோர், பிறருக்காக வாழவும் நீதிக்காகவும் நன்மைத்தனத்திற்காகவும் துன்புறவும் தயாராக இருக்கவும் வேண்டுமென்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்தாலியின் பொதுநலப் பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள தன்னார்வ இளையோரில் ஏறத்தாழ ஏழாயிரம் பேரை இன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இன்றைய இளையோர் நாளை சமுதாயத்தில் குறிப்பிடத்தகும் பங்காற்றவிருப்பதையும் குடும்பங்களை உருவாக்கவிருப்பதையும் குறிப்பிட்டு அவர்கள் அமைதிக்காகவும் நீதிக்காகவும் உழைப்பவர்களாக இருக்குமாறும் அவர் கூறினார்.

அமைதி என்பது உறுதியாக அடைந்துவிட்ட ஒன்றாக ஒருபோதும் இருப்பதில்லை, மாறாக இடைவிடாமல் கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது என்ற திருத்தந்தை, இப்பூமிப்பந்தில் சண்டைகளும் வன்முறைகளும் முடிந்ததாகத் தெரியவில்லை என்றார்.

எனவே நீதியின் வழியைக் குறித்து நிற்கும் இதயங்களின் உண்மையான மாற்றம் தேவைப்படுகின்றது, இதன் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் முழுமனித சமுதாயத்திற்கும் அமைதி கிடைக்கும் என்றும் திருத்தந்தை, இத்தாலிய இளையோரிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.