2009-03-28 15:44:24

உலகப் பூமி நேரம் மார்ச் 28, இரவு 8.30 - 9.30 மணி


மார்ச்28,2009. உலகில் வெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கென எடுக்கப்படும் மிகப்பெரும் முயற்சியாக, ஒருநாள் இரவு 8.30 முதல் 9.30 வரை, ஒருமணி நேரத்துக்கு விளக்குகளை அணைக்குமாறு உலகினரைக் கேட்டுள்ளது சர்வதேச வனவிலங்கு நிதியம்.

வெப்பமடைந்து வரும் இப்பூமிப்பந்தைக் காப்பாற்றுவதற்கு இவ்வாறு செய்வது பெரிய உதவியாக இருக்கும் என்று கூறும் இவ்வமைப்பு, கடந்த ஆண்டு இதேபோன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 35 நாடுகளைச் சேர்ந்த 370 நகரங்களில் ஏறத்தாழ ஐந்து கோடிப்பேர் விளக்குகளை அணைத்தனர் என்று உரைத்தது.

இவ்வாண்டு 88 நாடுகளில் 3400க்கும் மேற்பட்ட நகரங்களில் அந்தந்த நாட்டு நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணிவரை விளக்குகளை அணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பூமி நேர முயற்சி ஈராண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தொடங்கப்பட்டது.

இம்முயற்சிக்கு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

உலகப் பூமி நேரம் மார்ச் 28, இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது








All the contents on this site are copyrighted ©.