2009-03-27 19:29:24

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வரும் மே மாதம் 8 தேதியிலிருந்து 15 தேதி வரை புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்கிறார் . 270309


திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வரும் மே மாதம் 8 தேதியிலிருந்து 15 தேதி வரை புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்கிறார் . நவீன காலத்தில் திருப்பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது திருத்தந்தையாக நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இருக்கிறார் . இதற்கு முன்னர் திருத்தந்தை 6 ஆம் பவுல் 1964 ஆம் ஆண்டும் , திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் 2000 மாவது ஆண்டிலும் அங்கு திருப்பயணமாகச் சென்றிருந்தனர் . திருப்பயணத்தின் போது இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்று முக்கியம் நிறைந்த இடங்கள் தவிர , யாத் வாஷெம் , அம்மானில் உள்ள முக்கிய மசூதி , பாவம் தீர்க்க அழுவதற்காக உள்ள மதில் சுவர், மற்றும் எருசலேமிலுள்ள பாறைப் பேராலயத்தையும் பார்வையிடுவார் திருத்தந்தை .

ஜோர்டான் , இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீன நாட்டுக்கும் திருத்தந்தை செல்வார் .ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லாவையும் , இஸ்ராயேலின் தலைவர் பேரசையும் , பாலஸ்தீன நாட்டின் தலைவர் அப்பாசையும் சந்திக்க உள்ளார் .



மேமாதம் 9 ல் ஜோர்டானிலும் , மே 10 ல் ஜோர்தானுக்கு அப்பால் பெத்தானி , மற்றும் யோர்தான் நதிக்கும் , மே 12 ல் எருசலேத்திலும் , மே 13 ல் பாலஸ்தீனப் பகுதியில் பெத்லகேம் மற்றும் , 14 மே வியாழன்று நாசரேத்திலும் , மே மாதம் 15 தேதியில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த புனித கல்லறைக்கும் செல்வார் . செல்லும் இடங்களில் முக்கியத் தலங்களையும் , சமய , மற்றும் முக்கியத் தலைவர்களையும் திருத்தந்தை சந்திப்பார் . உரோமைக்குத் திரும்பும் மேமாதம் 15ல் எருசலேத்தில் உள்ள ஆர்மீனியப் பிதாப்பிதாவின் தூய யாகப்பர் தேவாலயத்துக்குச் சென்றுவி்ட்டு திருப்பயணத்தை முடித்துக் கொள்வார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.