2009-03-27 19:53:33

தற்கொலைக்குத் துணை போவதை கண்டிக்கிறார் ஆங்கிலேயப் பேராயர்.270309 .


நோயுற்றோரிடம் சாவது கடமை எனப் பிரிட்டனின் புதிய சட்டம் கூற முயல்வதாகக் கூறுகிறார் வேல்ஸ் பகுதியின் கார்டிப் மறைமாவட்டப் பேராயர் பீட்டர் ஸ்மித் . தற்பொழுது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தற்கொலைக்கு உதவுவதை சட்டத்தின் பாதுகாப்பில் கொண்டு வந்து அதற்கு ஒப்புதல் அளிக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது . விவாதிக்கப்பட்டு வரும் கொரோனர்ஸ் மற்றும் ஜஸ்டிஸ் சட்டம் தற்கொலைக்கு ஏதுவாக இணைய தளங்களில் செய்தி வழங்கவும் அனுமதி வழங்கவுள்ளதாகப் பேராயர் தெரிவித்து அதைக் கண்டனம் செய்கிறார் . தற்கொலை செய்வதற்குத் துணைபோகும் சட்டம் அதை ஆமோதிப்பதாக இல்லையா எனக்கேட்கிறார் பேராயர் பீட்டர் ஸ்மித் .








All the contents on this site are copyrighted ©.