2009-03-26 13:50:51

மார்ச் 27 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


புனித கத்பெர்ட் விழா. ஒரு குருமடத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், தமது விவேகத்தாலும் பொறுமையினாலும் புனித வாழ்வாலும் துறவிகளை நல்லவர்களாகவும் பணிவுள்ளவர்களாகவும் ஆக்கினார். ஆயராக நியமிக்கப்பட்ட இவர் மக்கள் இறையாசீரை நிரம்பப் பெற்று வாழ ஆர்வத்துடன் உழைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

மார்ச் 27, 1191 - திருத்தந்தை 3ம் கிளமெண்டடும் 1378 ல் திருத்தந்தை 11ம் கிரகரியும் இறந்தனர்

1513 - நாடுகாண் பயணி ஹூவான் போன்ஸ் தெ லெயோன், வேறு ஒரு தீவு என்று நினைத்து, வட அமெரிக்காவைக், குறிப்பாக புளோரிடாவைக் கண்டுபிடித்தார்

1892 - யாழ் நூலை எழுதிய சுவாமி விபுலாநந்தர் பிறந்தார்

1898 - இந்திய அறிஞர் சர் சையது அகமது இறந்தார்

1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

1969 - நாசாவின் மரினெர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.