2009-03-26 15:57:25

சகிப்புத் தன்மைக்கு எதிரானபோக்கு.கண்டிக்கிறார் வத்திக்கான் அதிகாரி260309


வத்திக்கான் திருப்பீடத்தின் ஜெனீவாவில் இயங்கும் ஐ .நா சபையின் நிரந்தர உறுப்பினர் பேராயர் சில்வானோ தோமாசி . இம்மாதம் 16 ஆம் தேதி மனித உரிமைகள் பற்றி ஐ . நா சபையில் பேசப்பட்டது . அங்கு உரை நிகழ்த்திய பேராயர் தோமாசி கிறிஸ்தவரகள் உட்பட மதச் சிறுபான்மை மக்கள் , ஒருதலைச் சார்பாக , வேறு படுத்திப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார் . இது உலகின் பல பகுதிகளில் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார் . வத்திக்கான் திருப்பீடம் இது குறித்துக் கவலைப் படுவதாகத் தெரிவித்த பேராயர் நாட்டை ஆள்வோர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து கல்வி , சட்டம் , நீதி போன்ற அமைப்புக்கள் வழியாக சமயச் சுதந்திரத்துக்குள்ள உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார் . சிறுபான்மை அல்லாத பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக இருக்கும் நாடுகளிலும் சமயத்துக்கருத்துக்களுக்கு எதிராக உலகச் சிந்தனைப்படி அரசு நடத்துவதாகவும் மேலும் பேராயர் சில்வானோ தோமாசி தெரிவித்தார் .

பொது நலத்தைக் கருத்தில் கொண்டு சமயங்கள் நன்னெறிப்படி வாழ மக்களுக்கு வழிகாட்டுவதாகவும் , சிறு நோக்குடைய அரசுகளின் திட்டங்களுக்கு அப்பால் நல்ல மதிப்பீடுகளை மதங்கள் வலியுறுத்துவதாகவும் பேராயர் தோமாசி மேலும் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.