2009-03-23 16:02:04

பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காகச் செபிக்க ஆயர் அழைப்பு


மார்ச்23,2009. பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று செஞ்சிலுவை சங்கப் பணியாளர்களுள் ஒருவரைக் கொலை செய்யவுள்ளகதாக அக்குழு மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து அவர்களின் விடுதலைக்காகச் செபிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்களின் விடுதலைக்காகப் பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு அழைப்புவிடுத்த ஆயர் லெயோபோல்தோ துமுல்க், இவர்களைக் கடத்தி வைத்திருக்கும் அபு சாயப் குழுவும் அவர்களை விடுவிக்க முயலும் இராணுவமும் வன்முறை வழிகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய அமைதி வழிகள் வழி இதற்கென உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிலிப்பைன்சின் சுலு மாகாணத்தின் இந்தியானன் காடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படவில்லை எனில் கடத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று பணியாளர்களுள் ஒருவரைக் கொல்வோம் என இசுலாமியத் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.