2009-03-21 14:07:57

போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் இரண்டு கிறிஸ்தவ அமைதிக் குழுக்கள் செபவழிபாடுகளை நடத்தின


மார்ச்21,2009. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் இரண்டு கிறிஸ்தவ அமைதிக் குழுக்கள் இவ்வெள்ளி மாலை செபவழிபாடுகளை நடத்தின.

பாக்ஸ் கிறிஸ்டி, ஒப்புரவு தோழமை ஆகிய இரண்டு அமைப்புகளும் இலண்டனில் நடத்திய இவ்வழிபாட்டில், கடந்த பல ஆண்டுகளாகப் போர் மற்றும் வன்முறையால் இறந்த பல்லாயிரக்கணக்கான ஈராக் மற்றும் ஆப்கான் மக்களை நினைவுகூரப்பட்டது.

ஈராக்கில் 2003ல் 14 இலட்சமாக இருந்த கிறிஸ்தவ சமூகம் தற்சமயம் ஏறத்தாழ 6 இலட்சமாகக் குறைந்திருப்பதாக மொசூல் பேராயர் பவுலோஸ் ராஹூ கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களுக்கு மட்டும் பிரிட்டன் செலவழிக்கும் நிதி 2010ம் ஆண்டில் 1800 கோடி பவுண்டுகளை எட்டும் என்று நொபெல் பொருளாதார விருது பெற்ற ஜோசப் ஸ்டிலிலிட்ஸ் கூறினார்







All the contents on this site are copyrighted ©.