2009-03-19 14:52:24

உண்மையான மதம் வன்முறையைத் தவிர்க்கின்றது, திருத்தந்தை


மார்ச்19,2009. காமரூனில் கிறிஸ்தவர்களும் இசுலாமியரும் அமைதியாக ஒன்றிணைந்து வாழ்வது பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கின்றது. உண்மையான மதம் எந்த உறுதியான மனிதக் கலாச்சாரத்திற்கும் அடிப்படையாக நிற்கிறது. இது, எல்லாவிதமான வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் புறக்கணிக்கிறது. விசுவாசத்தின் கோட்பாட்டின் மீது மட்டுமல்லாமல், சரியான காரணத்திலும் இதனைத் தவிர்க்கின்றது. விசுவாசத்திற்கும் காரண காரியத்திற்குமிடையே ஒவ்வாமை என்பதே இல்லை. மதமும் காரண காரியமும் ஒன்றையொன்று வலியுறுத்துகின்றன. எனவே கத்தோலிக்கரும் இசுலாமியரும் அன்பின் கலாச்சாரத்தை ஒன்றிணைந்து கட்டி எழுப்புமாறு தான் அழைப்புவிடுப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

காமரூனில், கத்தோலிக்கர் இசுலாமியர், பிற கிறிஸ்தவ சபையினர் ஆகியவர்களுக்கிடையே காணப்படும் ஆர்வம் நிறைந்த ஒத்ததுழைப்பு, பிற ஆப்ரிக்க நாடுகளில் பலசமயத்தவர் நீதி, அமைதி மற்றும் பொதுநலனுக்காக அர்ப்பணிப்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கட்டும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.