2009-03-19 20:06:32

இலங்கையை நிலைகுலையச் செய்யும் போரும் பொருளாதாரமும்.190309 .


உலகப் பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை நிலைகுலையச் செய்வதாக இலங்கையின் சமூகநிலை பற்றிய நிபுணர் சுனில் ராணாசிங்கே தெரிவிக்கிறார் .

குழந்தைகளும் மகளிரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் யுத்தம் காரணமாக பெருவாரியான பணத்தை இலங்கை அரசு வீணடிப்பதாகத் தெரிவித்துள்ளார் நிபுணர் .

உலகமெங்கும் பாதிப்பை உண்டாக்கும் பொருளாதாச் சரிவு இலங்கையையும் விட்டுவைக்கவில்லை . தமிழ் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து வரும் போருக்காக அரசு தனது சேமிப்புக் கணக்கிலிருந்து 45 விழுக்காடு பணத்தைச் செலிவிட்டிருக்கிறது . 2007 ஆம் ஆண்டு 340 கோடி டாலராக இருந்த சேமிப்பு தற்பொழுது 117 கோடியாகக் குறைந்துள்ளது . பற்றாக்குறையை மக்களுக்கு வரி விதித்துச் சேர்க்க உள்ளதாக அரசு தெரிவிக்கிறது .

சரியான உணவு இல்லாத காரணத்தால் கர்ப்பிணி மகளிருக்கு இரத்தக்குறைவும் , குழந்தைகளுக்கு , 32 விழுக்காடு குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் எடை குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . லஞ்சம் அதிகரித்து வருவதாகவும் , வங்கிகளிலிருந்து ஓவர் டிராப்ட் எனும் இருப்புக்கு அதிகமாக பணத்தை எடுத்துச் செலவழிப்பதும் நடந்து வருவதோடு , நிலைமையைச்

சமாளிக்க ஜப்பானிடமிருந்து 60 கோடி டாலர்களை கடனாக எதிர்பார்க்கிறது இலங்கை அரசு .








All the contents on this site are copyrighted ©.