2009-03-17 13:17:12

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சிறந்தவழி மன்னிப்பு எனும் அரசியலே, ஆயர் தாப்ரே


மார்ச் 17, 2009. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சிறந்தவழி மன்னிப்பு எனும் அரசியலே என்று இந்திய ஆயர் பேரவையின் இறையியல் மற்றும் திருச்சபை கோட்பாட்டு அவையின் தலைவர் ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.

அண்மைக் காலங்களில் பலவன்முறை நிகழ்வுகளால் இந்திய நாடு காயப்படுத்தப்பட்டுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட வசை மறைமாவட்ட ஆயர், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் வார்த்தைகளான நீதியின்றி அமைதியில்லை, மன்னிப்பின்றி நீதியில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

திருச்சபையின் சமூகப்படிப்பினைகள் மற்றும் அமைதி நாகரீகம் என்ற தலைப்பில் இடம் பெற்ற கருத்தரங்கில் உரையார்றிய ஆயர், இன்றைய வன்முறைகள் வாழ்வை அழிப்பது மற்றும் மறுப்பதுமான மனப்போக்கின் வெளிப்பாடாக உள்ளன என்றார்.

இத்தகைய வன்முறைகளை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடு அரசியல் மற்றும் கல்வி அளவில் அத்தியாவசியம் என்ற ஆயர் தாப்ரே, மன்னிப்பை ஊக்குவிப்பதற்கான மதங்களிந் கடமைகளையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.