2009-03-16 15:23:26

மார்ச் 17 தவக்காலச் சிந்தனை மத். 18 :21-35


அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

அனைத்தையும் மன்னித்த இயேசு இன்று நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி- அயலானை நீ மன்னிக்காத போது உன் வழிபாடு அர்த்தமற்றது. நீ செலுத்தும் காணிக்கையும் பொருளற்றது. எந்த அளவையால் நீ அளப்பாயோ அதே அளவையால் உனக்கு அளக்கப்படும். நீ பிறரை மன்னிக்காவிட்டால் கடவுளிடம் மன்னிப்புப் பெற உனக்கு உரிமை இல்லை







All the contents on this site are copyrighted ©.