2009-03-14 14:28:42

இலங்கையில் சண்டை இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படாவிட்டால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் முழுவதும் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றனர், யாழ்ப்பாண ஆயர்


மார்ச்14,2009. இலங்கையின் வடகிழக்கில் சண்டை இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படாவிட்டால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் முழுவதும் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் கூறினார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிக்கியுள்ள மக்களிந் வாவ்வைக் காப்பாற்றுவதற்கு இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் ஓர் உடன்பாட்டுக்கு வருமாறும் ஆயர் தாமஸ் மீண்டும் விலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு வளையங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் முழு அழிவைக் கருத்தில் கொள்ளாது இருதரப்பும் இறுதிச் சண்டைக்குத் தயாராகி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தப் பாதுகாப்பு வலையத்திற்குள் குறைந்தது 2 இலட்சம் பேர் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறுகிறது.

இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 964 பேர் காயமடைந்து புதுமத்தாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று மாகாண நலவாழ்வு அதிகாரி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.