2009-03-13 20:00:18

யூதமதத்தவரோடு உரையாடுவது அவசியம் என்கிறார் திருத்தந்தை.130309 .


இந்தவாரம் வியாழன் காலையில் திருத்தந்தை இஸ்ராயேலின் முக்கிய யூத மதத்தலைவர்களையும் வத்திக்கான் திருப்பீடத்தின் யூத சமயத்துக்கான மன்ற உறுப்பினர்களையும் தம் மாளிகையில் வரவேற்றுப் பேசினார் . இரு சமயங்களுக்கும் ஒரே அடித்தளமும் வாழ்க்கை மதிப்பீடுகளும் இருப்பதாகக் கூறிய திருத்தந்தை கலந்து உரையாடுவது ஒற்றுமைக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார் . இரு மதத்தவரும் வாழ்க்கையின் புனிதத் தன்மை , இல்லற வாழ்வின் மதிப்பீடுகள் சமூக நீதி , நன்னெறித் தத்துவங்கள் போன்றவற்றில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்ததை .



முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் 2000 ஆம் ஆண்டு புனித பூமிக்குத் திருப்பயணம் சென்றிருந்தார் . கடந்த 7 ஆண்டுகளில் இரு மதத்தினரிடையேயும் இறுக்கமான உறவு வளர்ந்துள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . இரு மதத்தவருக்கும் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் நாம் அறிந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார் திருத்தந்தை . திருத்தந்தையின் மே மாத புனித பூமித் திருப்பயணம் இரு சமயத்தவரையும் ஒருமைப்பாட்டில் இணைக்கவும் அந்நாட்டில் அமைதி நிலவவும் உதவிடத் தாம் செபித்து வருவதாகத் திருத்தந்தை கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.