2009-03-12 17:41:17

உரோமை தொலைத் தொடர்பு கருத்தரங்கில் இந்தியர்கள் . 120309 .


உரோமையில் நடக்கும் சமூகத் தொலைத் தொடர்பு கருத்தரங்கில்

இந்தியாவின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள் . இக்கருத்தரங்கு இம்மாதம் 9 தேதியிலிருந்து 13 தேதிவரை நடக்கிறது . திருச்சபையின் தொலைத் தொடர்பில் புதிய சிந்தனை என்பது கருத்தரங்கின் மையக் கருத்தாக இருக்கிறது . 92 நாடுகளிலிருந்து 90 ஆயர்கள் கலந்து கொள்கிறார்கள் .இதனை வத்திக்கான் திருப்பீடத்தின் பி.சி.சி.ஸ் என்னும் சமூகத் தொடர்பு மன்றம் நடத்துகிறது . இம்மன்றத்தின் தலைவராக பேராயர் கிளாடியோ மரிய செல்லி இருந்துவருகிறார் . முனைவர் பட்டத்துக்கு உரோமையில் பயின்று வரும் மாணவர்களும் , இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள் . இதில் போபால் பேராயர் லியோ கோர்னேலியோ , இலங்கையின் திரிகோணமலை ஆயர் கிங்ஸ்லி ஸ்வாமிபிள்ளை , பங்களாதேஷின் ஆயர் ஜெர்வாஸ் ரொசாரியோ மற்றும் இந்திய அருள் தந்தையர்கள் இருவர் கலந்து கொள்கிறார்கள் .








All the contents on this site are copyrighted ©.