2009-03-11 16:15:39

திருத்தந்தையின் புதன் பொது மறை போதகம் – எழுத்தாளர் புனித பொனிபாஸ்


மார்ச்11, 2009 கிழக்கு மறஅறும் மேற்கத்திய நாடுகலின் தொடக்ககால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் குறித்த புதன் பொது மறை போதகத்தில் ஜெர்மானியர்களின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் புனித பொனிபாஸ் குறித்து இன்று பார்ப்போம் என உரையைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 புனித பொனிபாஸ் இங்கிலாந்தில் பிறந்து வின்பிரட் என்ற பெயர் தாங்கி துறவுமட வாழ்வை ஏற்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பெரிய அறிவு மேதையாக வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் துவக்க காலத்திலேயே அவரில் காணப்பட்டாலும் ஐரோப்பிய கண்டத்தின் புறவினத்தாரிடையே நற்செய்தி அறிவிப்பதற்கான அழைப்பையே தன்னில் அவர் கண்டு கொண்டார் தேர்ந்தார். துவக்க காலத்தில் சில சரிவுகளைச் சந்தித்த பின்னர் இவர் உரோம் நகருக்கு வந்து திருத்தந்தையை சந்தித்த போது ஜெர்மானியர்களிடையே சென்று நற்செய்தி அறிவிக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் அவர் வின்பிரட் என்ற தனது இயற்பெயரை மாற்றி பொனிபாஸ் என்ற புதிய பெயரை எடுத்துக் கொண்டார். கிறிஸ்தவ விசுவாசத்தையும் கிறிஸ்தவ ஒழுக்கரீதி மதிப்பீடுகளையும் பரப்புவதில் முழுமூச்சுடன் உழைத்த புனித பொனிபாஸ், வட ஐரோப்பா முழுவதும் ஆயர் இல்லங்களையும் துறவுமடங்களையும் உருவாக்கினார். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ கலாச்சாரம் வளர்வதற்குச் சிறப்புப் பங்காற்றினார்.

கிறிஸ்தவுக்கான சாட்டிய வாழ்வுக்கான மணிமுடியாக, மறைசாட்சியாய் மரணமடைந்த புனித பொனிபாஸ், புல்டா என்ற இடத்தின் துறவுமடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மறைப்பணி ஆற்றுவதற்கான அவரின் ஆர்வம், இறைவார்த்தையிலும் கத்தோலிக்க விசுவாசத்தின் முழுமைத்தன்மையிலும் அவர் கொண்டிருந்த பற்றும் விசுவாசமும் அப்போஸ்தலிக்கத் திருச்சபையோடு அவர் கொண்டிருந்த நெருங்கிய ஒன்றிணைப்பு, ஜெர்மன் கலாச்சாரத்திற்கும் உரோமைய கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்கும் இடையே பலனுடைய ஒத்திசைவை ஊக்குவிக்க அவர் எடுத்த முயற்சிகள் முதலியவைகள் மூலம் புனித பொனிபாஸ் நம் கிறிஸ்தவ வாழ்வில் நம்மைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருக்கிறார். இவ்வாறு உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.