2009-03-11 16:22:00

சமய சகிப்பற்றதன்மையைப் பொதுவிலும் வாடிக்கையாகவும் எதிர்கொள்வது இந்த 21ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பணியாக இருக்கின்றது, ஆஸ்திரேலிய கர்தினால்


மார்ச்11, 2009. சமய சகிப்பற்றதன்மையைப் பொதுவிலும் வாடிக்கையாகவும் எதிர்கொள்வது இந்த 21ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பணியாக இருக்கின்றது என்று ஆஸ்திரேலிய கர்தினால் ஜார்ஜ் பெல் கூறினார்.

மேற்கத்திய உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் பாகுபாடுகளுக்கெதிரான சட்டங்களைப் பயன்படுத்துவதன் புதிய மற்றும் ஆபத்தான போக்கினால் ஏற்படும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது என்று சிட்னி பேராயர் கர்தினால் பெல் கூறினார்.

“சகிப்பற்றதன்மையின் பல்வேறு கூறுகள்:சமயமும் சமயசார்பற்ற தன்மையும்” என்ற தலைப்பில் இலண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் நியுமென் கழகத்தில் அண்மையில் உரையாற்றிய கர்தினால் பெல், கிறிஸ்தவர்கள் சகிப்பற்றதன்மையினால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டுமெனில், தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

மேலும், கிறிஸ்தவர்கெதிரான பாகுபாட்டிற்குப் பலியாகுவதற்கு ஒருவர் ஆப்ரிக்காவிலோ ஆசியாவிலோ வாழ வேண்டுமென்ற நியதி இல்லை, ஏனெனில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்படி பலியானவர்கள் நிறையப் பேர் உள்ளனர் என்று வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச கூட்டம் ஒன்றில் கூறப்பட்டது.

ஐரோப்பா, வடஅமெரிக்கா, மத்திய ஆசியா, கவ்காசுஸ் உட்பட 56 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சர்வதேச குழு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.