2009-03-07 14:20:48

பெண்களுக்கு எதிரான வன்முறைமுறைகள் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


மார்ச்07,2009. பெண்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறை கணக்கிடப்பட முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் வேளை, உலகில் பெண்களும் சிறுமிகளும் எதிர் நோக்கும் உரிமை மீறல்கள் களையப்படுவதற்கு உலகத் தலைவர்கள் தங்கள் நாடுகளில் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் நிலைமை குறித்த ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்களிடம் பேசிய மூன், பெண்களுக்கு எதிரான வன்முறை மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம், நமது கலாச்சாரத்தின் அடிதளத்தின் மீதான தாக்குதல் என்றார்.

சிலவேளைகளில் பெண்கள் நெசவாளர்களாகவும், ஆண்கள் மாவீரர்களாகவும் நோக்கப்படுகிறார்கள் என்ற அவர், உலகில் கற்பழிப்புகள் மற்றும் கற்பழிப்பு முயற்சிகளால் ஐந்து பெண்களுக்கு ஒருவர் வீதம் துன்புறுகின்றனர் என்றார்.

சில நாடுகளில் மூன்று பெண்களுக்கு ஒருவர் வீதம் அடிக்கப்படுகின்றனர், வியாபாரம் செய்யப்படுவோரில் எண்பது விழுக்காட்டுக்கு அதிகமானோர் பெண்கள், ஏறத்தாழ 13 கோடிப் பெண்களுக்கு பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்பட்டுள்ளன, ஐந்து பெண்களுக்கு ஒருவர் வீதம் பாலியல் வன்புணர்ச்சியில் வலுவந்தமாக உட்படுத்தப்படுகின்றனர் அல்லது வாழ்வு முழுவதும் உரிமை மீறல்களை எதிர் கொள்கின்றனர் என்று ஐ.நா.நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.