2009-03-07 14:21:05

ஊனமுற்றோர்க்கான ஐ.நாவின் வரைத்திட்டம் இவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கென்று மிக உதவியாக இருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர்


மார்ச்07,2009. உலகில் ஊனமுற்றோர் மிக மோசமான மனித உரிமை மீறல்களை

எதிர் கொள்கின்றனர், எனினும் கடந்த ஆண்டில் அமலுக்கு வந்த ஐ.நாவின் வரைத்திட்டம் இவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கென்று மிக உதவியாக இருக்கும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை கூறினார்.

உலகில் ஊனமுற்ற நிலையில் வாழும் ஏறத்தாழ 65 கோடிப் பேரின் வாழ்வுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்படுவதற்கு கடந்த மேமாதத்தில் கொண்டுவரப்பட்ட ஐ.நா.ஒப்பந்தம் உதவும் என்று இவ்விவகாரம் குறித்த விவாதத்தில் அவர் தெரிவித்தார்.

மார்ச் 18ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.