2009-03-05 13:14:54

மார்ச் 06 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1079 - ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்

1447 - ஐந்தாம் நிக்கலாஸ் பாப்பரசர் ஆனார்.

1475 - இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர் மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி பிறந்தார்.

1788 - கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.

1937 - விண்ணுக்குச் சென்ற முதற் பெண்ணான சோவியத் விண்வெளி வீரர் வலன்டீனா தெரெஷ்கோவா பிறந்தார்.

1946 - வியட்நாம் ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது

1957 – கானா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.

1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.

மார்ச் 06 இத்தாலியின் வித்தெர்போ புனித ரோசா விழா.



 








All the contents on this site are copyrighted ©.