2009-03-05 15:23:51

ஜெனீவாவில் குடியேற்றதாரர்கள் பற்றி நடத்திய ஐ.நா கூட்டம் .050309 .


இம்மாதம் 3 ஆம் தேதி ஜெனீவாவில் குடியேற்றதாரர்கள் பற்றி நடத்திய ஐ.நா கருத்தரங்கில் குடியேற்றதாரர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திட்டவட்டமாக பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் பேராயர் சில்வானோ தோமாசி . பேராயர் தோமாசி ஜெனீவாவில் இயங்கும் ஐ.னா சபையில் வத்திக்கான் திருப்பீடத்தின் நிரந்தர உறுப்பினர் .



அவர் உரையின்போது ஒவ்வொரு நாடும் உறுதியான குடியேற்றதாரர்களுக்கான கொள்கையை வகுக்கவேண்டும் என்றும் , அகில உலக குடியேற்றதார்களுக்கான சட்டங்களை மதிக்கவேண்டும் என்றும் பேராயர் கூறினார் . சென்ற ஆண்டு சில நாடுகளின் நீதியற்ற தாக்குதலிலிருந்து தப்பிக்க எண்ணி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 1502 பேர் வழியில் மாண்டதாகத் தெரிவித்தார் . அப்படிப்பட்டவர்களை வரவேற்றுப் பாதுகாக்க நாடுகள் சட்டம் இயற்றவேண்டும் எனத் தெரிவித்தார் .

துயரத்தில் இருப்பவர்களுக்கு பாதுகாப்புத் தர நாம் எவ்வாறு மறுக்கமுடியும் என்று திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கேள்வி எழுப்பியதைப் பேராயர் எடுத்துரைத்தார் . ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற உலக நாடுகளிலும் குடியேற்றதாரர்களுக்கு தக்க பாதுகாப்புக் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என ஐ.நா சபையில் வலியுறுத்தினார் பேராயர் சில்வானோ தோமாசி .








All the contents on this site are copyrighted ©.