2009-03-04 15:48:38

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏழை நாடுகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருக்கின்றன, உலக நிதியகம்


மார்ச்4,2009. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் இருபதுக்கும் மேற்பட்ட மிக ஏழை நாடுகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐஎம்எப் என்ற உலக நிதியகம் எச்சரித்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளில் பாதி, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகள் என்றும் உரைக்கும் உலக நிதியகம், இந்நாடுகளுக்கு இவ்வாண்டில் 2500 கோடி டாலர் நிதியுதவி தேவைப்படும் என்று கூறியது. இந்நாடுகளில் 39 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர், இன்னும் இப்பொருளாதார நெருக்கடியினால் குழந்தை இறபபு எனண்ணிக்கை இரண்டு இலட்சத்திலிருந்து 4 இலட்சமாக உயரும் என்று யுனெஸ்கோ கூறியது.

185 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்நிதியகம், வருமானம் குறைவாகவுள்ள நாடுகளுக்கான நிதியுபதவியை கடந்த ஆண்டில் ஏற்கனவே அதிகரித்துள்ளது, இவ்வாண்டில் அதனை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது கவனிக்கதக்கது.

மேலும், இந்தியாவில் ஏறத்தாழ 22 கோடிப் பேர் ஏற்கனவே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வேளை, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது, குறைந்தது ஒரு கோடி வேலை வாய்ப்புகள் அச்சுறுத்தலில் இருப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 1,470 கோடி டாலர் அளவான ஏற்றுமதி இருந்தது, ஆனால் அது இந்த ஜனவரியில் 1,230 கோடி டாலராகக் குறைந்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் அறிவித்தது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலை இழந்து அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.