2009-03-02 13:52:47

மார்ச் 03 தவக்காலச் சிந்தனை


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ' விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

இறைவனையும் மனிதரையும் உறவால் இணைக்கின்ற பாலம்தான் இயேசு கற்பித்த இச்செபம். கேட்பதையே மையமாக வைத்து வாழப் பழகிவிட்ட மனிதரிடத்தில் இறைவன் ஒரு வியாபாரியாகவும் மருத்துவராகவும் அற்புதங்கள் செய்யக்கூடியவராகவும் சிக்கித் தவிக்கிறார். அதனால்தான் எண்ணற்ற திருத்தலங்கள் இருந்தும் எண்ணற்ற செபக்கூட்டங்கள் நடத்தியும் சமூக மாற்றம் என்பதை அரிதாகக் காண முடிகின்றது. இவ்வேளையில் இயேசு இவ்வாறு செபம் செய்யத் தூண்டுகிறார். ஆம். செபிக்காத மனிதர் வேரில்லாத மரத்திற்கு ஒப்பானவர்கள்.

செபம் – ஆண்டவரே உமது வார்த்தை வாழ்வை மாற்றக்கூடியது. ஒவ்வொரு நாளும் ுமது வார்த்தையில் புதுமை அடைய உதவும்








All the contents on this site are copyrighted ©.