2009-02-28 13:47:02

பிரிட்டன் பிரபுக்கள் அவையில் 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் முறையாக கத்தோலிக்க ஆயர் ஒருவர்


28பிப்.2009. பிரிட்டனில் 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் முறையாக கத்தோலிக்க ஆயர் ஒருவரை அந்நாட்டு பிரபுக்கள் அவையில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஓய்வுபெறவிருக்கும் பிரிட்டன் கத்தோலிக்கப் பிதாப்பிதா கர்தினால் கோர்மாக் மர்பி ஒக்கானரின் தலைமைத்துவ பண்புகளைப் பாராட்டிப் பேசிய அந்நாட்டு பிரதமர் கோர்டன் ப்ரவுன், இவ்விவகாரம் பிரசீலிக்கப்படும் என்றார்.

கர்தினால் ஒக்கானர், சர்வதேச வளர்ச்சி, உலக ஏழ்மையைக் களைவது போன்ற விவகாரங்களில் காட்டி வரும் ஆர்வம், கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியேயும் அவருக்கு நன்மதிப்பைத் தேடிக் கொடுத்துள்ளது என்று “த டாப்ளட்” என்ற கத்தோலிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார் ப்ரவுன்.

பிரிட்டன் அரசின் இம்முயற்சி, அண்மையில் பிரதமர் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்த போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்சமயம் பிரிட்டன் பிரபுக்கள் அவையில் இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த 26 ஆயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.