2009-02-28 13:44:50

கத்தோலிக்கத் திருச்சபையின் 2009ம் ஆண்டுக்கான குறிப்பேடு வெளியீடு


28பிப்.2009. Annuario Pontificio எனப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் விபரங்கள் அடங்கிய 2009ம் ஆண்டுக்கான குறிப்பேடு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.

திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயின் தலைமையில் சென்ற குழு திருத்தந்தையை சந்தித்து இவ்வாண்டுக் குறிப்பேட்டை சமர்ப்பித்தது.

இப்புதிய குறிப்பேட்டின்படி, 2008ம் ஆண்டில் திருத்தந்தை, ஓர் உயர்மறைமாவட்டத்தையும், 11 புதிய மறைமாவட்டங்களையும் உருவாக்கியுள்ளார் மற்றும் 169 புதிய ஆயர்களையும் நியமித்துள்ளார்.

2007ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உலகில் திருமுழுக்குப் பெற்ற விசுவாசிகளின் எண்ணிக்கை 17.3 விழுக்காடாகவும், இவ்வெண்ணிக்கை ஏறத்தாழ 114 கோடியே 70 இலட்சமாகவும், இது 2006ம் ஆண்டைவிட 1.1 விழுக்காடு அதிகம் எனவும் இவ்வேடு கூறுகிறது.

மேலும் இக்கணக்கெடுப்பின்படி ஆயர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்து 4898 ஆகவும் குருக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 408024 ஆகவும் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

உலக அளவில் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, குறிப்பாக ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருப்பதாகவும் அவ்வேடு கூறுகிறது








All the contents on this site are copyrighted ©.