2009-02-28 13:49:10

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டில் பலரை ஏற்கனவே தபக்காலத்தை அனுபவிக்க வைத்துள்ளது, கர்தினால் மகோனி


28பிப்.2009. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டில் பலரை ஏற்கனவே தபக்காலத்தை அனுபவிக்க வைத்துள்ளது என்று லாஸ் ஆஞ்சலெஸ் கர்தினால் ரோஜர் மகோனி தனது தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார்.

லாஸ் ஆஞ்சலெஸ் உயர்மறைமாவட்டத்தில் 2007ம் ஆண்டிலே தவக்காலம் தொடங்கிவிட்டது என்றுரைக்கும் கர்தினாலின் செய்தி, இலட்சக்கணக்கான வேலைகள் பறிபோவதன் மூலம் இத்தவக்காலம் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் உரைக்கின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கபட்டுள்ளோருக்கு செபம் மற்றும் ஈகையினால் ஆதரவு வழங்குமாறும் கேட்டுள்ளது அச்செய்தி.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வயதான மற்றும் நோயாளித் துறவிகளைப் பராமரிப்பதற்கென அந்நாட்டின் 58 துறவு சபைகளுக்கு பத்து இலட்சம் டாலரை இவ்வாண்டில் வழங்கத் தீர்மானித்துள்ளது அரசு.








All the contents on this site are copyrighted ©.