2009-02-27 14:31:33

மார்ச் 02 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1807 - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது.

1888 – போர் மற்றும் அமைதிக்காலங்களில் சூயஸ் கால்வாய் வழியாக சுதந்திரமாக கப்பல் போக்குவரத்துக்கு வழி அமைக்கும் கான்ஸ்ட்டாண்டிநோபிள் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1896 - எத்தியோப்பியா, ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் காலனி ஆதிக்க நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1896ல் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையும், 1935ல் வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதனும் பிறந்தனர்.

1459ல் திருத்தந்தை ஆறாம் ஏட்ரியனும், 1810ல் திருத்தந்தை 13ம் சிங்கராயரும், 1876ல் திருத்தந்தை 12ம் பத்திநாதரும் பிறந்தனர்.

1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர்.

1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்

1939 – கர்தினால் யுஜேனியோ பச்செல்லி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12ம் பத்திநாதர் என்ற பெயரையும் எடுத்துக் கொண்டார்.

1949 - இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறந்தார்

1956 - மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1995 - யாஹூ! தொடங்கப்பட்டது.

1998 - ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது

மார்ச் 02 புனித சிம்பிளிசியுஸ் திருவிழா. கத்தோலிக்க மறைக்கெதிராய் எழுந்த கிழக்கத்திய கொள்கைகளைத் துணிவுடன் எதிர்த்து வெற்றி கண்டவர்







All the contents on this site are copyrighted ©.