2009-02-27 19:25:51

உரோமையில் உள்ள குருக்களை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை.270209.


தமது அடுத்த சுற்றுமடல் வெளிவரக் காலதாமதமாவதற்கு உலகப் பொருளாதார நெருக்கடியே காரணம் என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

இந்த வியாழன் காலையில் உரோமையில் இருக்கும் குருக்களில் 400 க்கும் அதிகமானோரை திருத்தந்தை தமது மாளிகையில் வரவேற்றுப் பேசி , மகிழ்ச்சியோடு கருத்துப் பரிமாறிக்கொண்டார் . உரோமை மறைமாவட்டத்தில் பணிசெய்யும் குருக்களின் வாழ்வு , அனுபவங்கள் , சவால்கள் , மகிழ்ச்சி ஆகியன பற்றி தெரிந்துகொள்ள மிக்க ஆர்வமுள்ளதாக அதுபோது திருத்தந்தை தெரிவித்தார் . தமது வத்திக்கான் பணி காரணமாக குருக்களோடு நெருங்கிய தொடர்பு குறைந்துவிட்டதாகக் கூறிய திருத்தந்தை ஆயர்களோடு அவர் கொண்டுள்ள இறுக்கமான உறவு வழியாக அகில உலகத் திருச்சபை பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்தார் . 90 நிமிடங்கள் நடந்த கருத்துப்பகிர்வின் போது திருத்தந்தையின் உரைக்குப்பின்னர் 8 குருக்கள் கேள்விகள் எழுப்பினர் . அதுபோது திருத்தந்தை நகைச்சுவையோடு சில கேள்விகள் நீளமானதாக இருப்பதாகவும் , சிலர் தாங்களே பதில் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார் . அவருடைய அடுத்த சுற்றுமடல் “உண்மையில் அன்பு”, என்ற தலைப்பில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . பொருளாதார முன்னேற்றம் பற்றியும் சமத்துவம் நீதி அடிப்படையில் ஏழைகளுக்குப் ஈந்து மகிழ்வதையும் திருத்தந்தை தம் உரையின் போது வலியுறுத்தினார் . வசதியுள்ளவர்கள் தியாகங்கள் செய்து தானமீய வேண்டும் எனக்கூறினார் . உலகப் பொருளாதார நெருக்கடிபற்றி ஆழமாகத் தெரிந்து கொண்டு சுற்றுமடலை எழுத உள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.