2009-02-26 11:58:23

குடிபெயர்தலும் நம்பிக்கையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை, திருப்பீட அதிகாரி


26பிப்.2009. நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் மிகுந்த நம்பிக்கையோடு தொடரும் மனிதரின் பயணத்தில் குடிபெயர்தலும் நம்பிக்கையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன என்று குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் “ஸ்பே சால்வி” அதாவது நம்பிக்கை என்பது பற்றிய திருமடல் குறித்து சர்வதேச காரித்தாஸ் மற்றும் அரசியல் கழகம் இவ்வியாழக்கிழமை வத்திக்கானில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, “குடியேற்றமும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை முன்வைத்தார்..

நீதி, சுதந்திரம், உண்மை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை அதிகம் தேவைப்படும் உலகுக்கு திருச்சபை நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்ற பேராயர் மர்க்கெத்தோ, கடவுளின்றி இருக்கும் உலகம் நம்பிக்கையின்றி இருக்கின்றது என்ற திருத்தந்தையின் கூற்றையும் சுட்டிக் காட்டினார்.

கிறிஸ்தவ சமூகம் மக்களுக்கு நம்பிக்கை வழங்குவதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.