2009-02-25 15:01:35

வறுமை, புரட்சிக்குழுக்களின் தொடர் வன்முறை போன்ற ஆப்ரிக்கக் கண்டத்தை வருத்தும் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதற்கு ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் மன்றம் உதவியாக இருக்கும், குலு பேராயர்


25பிப்.2009. வறுமை, புரட்சிக்குழுக்களின் தொடர் வன்முறை, வளர்ச்சிக்கென அரசுகளிடமிருந்து பெறும் குறைந்த அளவிலான உதவி போன்ற ஆப்ரிக்கக் கண்டத்தை மிகவும் வருத்தும் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதற்கு ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் மன்றம் அக்கண்டத்தின் ஆயர்களுக்கு உதவியாக இருக்கும் என்று உகாண்டா நாட்டு குலு பேராயர் கூறினார்.

ஆப்ரிக்காவுக்கும், குறிப்பாக உகாண்டா நாட்டுக்கும் ஒப்புரவும் நீதியும் அமைதியும் அதிகமாகத் தேவைப்படும் இந்நாட்களில் இவ்வாயர் மன்றம் நடைபெறுகிறது என்று குலு பேராயர் ஜான் பாப்பிடிஸ்ட் ஒடாமா வாஷிங்டனில் கூறினார்.

வளர்ச்சியே அமைதிக்கான பாதை என்று பேசிய அவர், ஏழை ஆப்ரிக்கர்கள் கிறிஸ்துவினால் உறுதி வழங்கப்பட்ட மாண்புடன்கூடிய வாழ்வு வாழ்வதற்கு வாய்ப்பை எட்டும்வரை அக்கண்டம் நிலையான அரசியலை அனுபவிக்காது மற்றும் வறுமையின் கடும் பாதிப்புக்களிலிருந்து வெளிவர இயலாது என்றார்.

ஆப்ரிக்கக் கண்டத்திற்கு இவ்வளவு பெருமளவான உதவிகள் செய்யப்பட்டு வந்தாலும் அக்கண்டம் முழுவதும் மக்களின் வாழ்க்கைத்தரம் பரவலாக மோசமாகவே உள்ளது என்றார் பேராயர் ஒடாமா.








All the contents on this site are copyrighted ©.