2009-02-25 15:00:17

வடகடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் ஐந்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட கிறிஸ்த சபைத் தலைவர்கள் அழைப்பு


25பிப்.2009. நார்வே நாடு உலக வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்துவதற்கான முயற்சிகளில் வெற்றியடைய வேண்டுமெனில் வடகடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் ஐந்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுமாறு அந்நாட்டு கிறிஸ்த சபைத் தலைவர்கள் அழைப்புவிடுத்தனர்.

வடகடலில், குறிப்பாக ஆர்டிக் வட்டத்தில் தீவுகள் நிறைந்த பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டால் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்துவதற்கான நார்வேயின் முயற்சிகளுக்கு உதவும் என்று லூத்தரன் ஆயர் டார் ஜோயர்ஜென்சன் கூறினார்.

உலக வெப்பநிலை கட்டுபாடு குறித்த உடன்பாட்டை நார்வே நாடு நியாயமுடன் நடத்த வேண்டுமென்றால் பெட்ரோலியத் தொழிற்சாலைகள் வாயுக்களைத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் ஏறத்தாழ 1,50,000 பேர் நேரிடையாக மறைமுகமாகவோ வேலை செய்கின்றனர் என்பதை ஆயர் நினைவில் கொள்ளுமாறு நார்வே வணிகக் கழகங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.