2009-02-25 14:58:04

சுற்றுச்சூழல் பிரச்சனை ஓர் ஆழமான ஆன்மீகப் பிரச்சனையின் பிரதிபலிப்பாக இருக்கின்றது, ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள்


25பிப்.2009.சுற்றுச்சூழல் பிரச்சனை ஓர் ஆழமான ஆன்மீகப் பிரச்சனையின் பிரதிபலிப்பாக இருக்கின்றது என்று ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கூறினர்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அவையும் ஹங்கேரியின் எஸ்டர்காமில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டது.

இறைவனின் படைப்புப் பற்றிய விவகாரத்தை முக்கியமாய் எடுத்து விவாதித்த இக்கூட்டத்தினர் உலகில் வெளியில் பாலைவனங்கள் வளர்ந்து வருவது உள்ளார்ந்த பாலைவனங்கள் அதிகரிப்பதே காரணம் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கூற்றையும் சுட்டிக்காட்டினர்.

மனிதர், இறைவனின் படைப்பை சுரண்டுபவர்களாக இல்லாமல் அதனைப் பாதுகாப்பவர்களாகத் தங்களை நோக்குமாறு கிறிஸ்தவ தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 வரை படைப்பிலுள்ள இறைவனின் நன்மைத்தனத்தைத் தியானித்து அதனைப் பராமரிப்பதற்கு அர்ப்பணிப்பதற்கு இசைவு தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.








All the contents on this site are copyrighted ©.