2009-02-25 15:02:41

ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உலகின் மற்ற பகுதிக்கு எச்சரிப்பு மணியாக இருக்கின்றது, கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர்கள்


25பிப்.2009. ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உலகின் மற்ற பகுதிக்கு எச்சரிப்பு மணியாக இருக்கின்றது மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் மாற்றத்தை முன்குறித்துக் காட்டுவதாக இருக்கின்றது என்று கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர்கள் எச்சரித்தனர்.

கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர்கள் லெபனனின் பெய்ரூட்டில் அண்மையில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பெய்ரூட் கல்தேய ரீதி ஆயர் மிஷேல் கசாரிஜி, ஈராக்கில் இடம் பெறும் கிறிஸ்தவர்களை அழிக்கும் முறையானது பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் பயன்படுத்தப்படக்கூடும் என்றார்.

ஈராக் கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது தவிர்க்க முடியாததாக சர்வதேச சமயத் தலைவர்கள் நோக்குகின்றனர் என்றுரைத்த அவர், நமது முஸ்லீம் சகோதரர்கள் இதிலுள்ள ஆபத்தை உணர்ந்து ராக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பை அழிப்பது குறித்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் உண்மையிலே ஒடுக்கப்படுகின்றனர், இது இசுலாத்தின் மரபுக்குப் புறம்பானது என்று பல முஸ்லீம்கள் கூறுவதையும் கல்தேய ரீதி கத்தோலிக்கத் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார் ஆயர் கசாரிஜி.








All the contents on this site are copyrighted ©.