2009-02-23 15:00:11

பிப்ரவரி 24 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


பிப்ரவரி 24 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்

கி.பி.303-உரோமைப் பேரரசன் கலேரியுஸ் தனது பேரரசில் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தான்.

1582 – திருத்தந்தை 13ம் கிரகரி, கிரகோரியன் நாட்காட்டியை அறிவித்தார்.

1739 – கர்னல் யுத்தம்- ஈரானிய இராணுவ ஆட்சியாளர் நதிர் ஷா இந்திய முகாலயப் பேரரசரான முகமது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்..

1920 – நாத்சி கட்சி உருவானது.

2008 – பிதல் காஸ்ட்ரோ, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கியூபாவின் அதிபராக இருந்த பின்னர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தாய்லாந்தில் தேசிய கலைஞர் தினம்.

மெக்சிகோவில் தேசிய கொடி தினம்.

பிப்ரவரி 24 புனித மாத்தா அருளப்பர் விழா. இவர் பிறந்த உடனே இவரது தாய் இவரைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தாள். முதல் திருப்பலியில் இவர் கண்ட காட்சிக்குப் பிறகு அடிமைப்படுத்தப்பட்டவர்களை மீட்கத் தீர்மானித்தார். அதற்காக ஒரு சபையையும் நிறுவினார். ஊர் ஊராகச் சென்று தர்மம் கேட்டுப் பணம் சேர்த்து அடிமைகளை மீட்டார்.








All the contents on this site are copyrighted ©.