2009-02-21 15:36:15

உலக அளவில் சமூக நீதியின் முக்கியத்துவம் உணரப்பட ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்


21பிப்.2009. மனித மாண்பும் மனித முன்னேற்றமும் ஐ.நா.பணியின் மையமாக இருக்கும் வேளை, பலரின் உரிமைகள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றன என்று கவலை தெரிவித்து உலக அளவில் சமூக நீதியின் முக்கியத்துவம் உணரப்படுமாறு வலியுறுத்தினார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.

பிப்ரவரி 20, இவ்வெள்ளிக்கிழமை சர்வதேச முதல் சமூக நீதி தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியியட்ட மூன், கடும் ஏழ்மை, பசி, பாகுபாடு, மனித உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகியவை இவ்வுலகின் நன்னெறிச் சூழலில் தழும்பாகவே தொடர்ந்து காண்ப்படுகின்றன, தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி இதனை மேலும் மோசமடையச் செய்கின்றது என்று கூறினார்.

மக்கள் அனைவரும் ஒரு தரமான வாழ்வையும் சமவாய்ப்புக்களையும் அனுபவிக்கும் போது உலகில் நிலையானதன்மையும் வளமையும் ஏற்படும் என்றும் பானின் செய்தி கூறுகிறது.

2007ம் ஆண்டு நவம்பரில் ஐ.நா.வின் 24வது பொது அவை, சர்வதேச சமூக நீதி தினம் பிப்ரவரி 20ம் தேதி கடைபிடிக்கப்படுவதற்குத் தீர்மானித்தது.








All the contents on this site are copyrighted ©.