2009-02-21 15:33:17

இயேசு கிறிஸ்துவையும் அன்னைமரியையும் கேவலமாகச் சித்தரித்த இஸ்ரேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் திருப்பீடம் கண்டனம்


21பிப்.2009. இயேசு கிறிஸ்துவையும் அன்னைமரியையும் கேவலமாகச் சித்தரித்த இஸ்ரேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த புனித பூமி கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் சேர்ந்து தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

மரியா தனது 15வது வயதில் பள்ளி நண்பர் ஒருவர் மூலம் கர்hdபம் தரித்தாள், இயேசு குண்டாக இருந்ததால் இளம் வயதிலே இறந்தார் என்று இம்மாதத்தில் இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்றின் இரவு நிகழ்ச்சி கேவலமாகச் சித்தரித்ததை முன்னிட்டு தங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த புனித பூமி கத்தோலிக்கத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குத் தனது ஆதரவை தெரிவித்தது திருப்பீடம்.

இயேசுவில் நம்பிக்கை கொள்பவர்களின் சமய உணர்வுகளை நோக்கிய இத்தகைய கேவலமான மற்றும் புண்படுத்தும் சமய சகிப்பற்றதன்மைச் செயல்கள் வருந்தத்தக்கவை என்றுரைக்கும் வத்திக்கான் கண்டன அறிக்கை, தொலைகாட்சி நிகழ்ச்சியில் நையாண்டி செய்யப்பட்டுள்ள இயேசுவgம் மரியும் இஸ்ரேல் குழந்தைகள் என்று கூறியது.

இதற்கிடையே, இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் ஒளிபரப்பப்படாதிருக்கவும், இது சம்பந்தப்படட் தொலைக்காட்சி அமைப்பு பொதுவில் இதற்கு மன்னிப்பு கேட்பதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் அரசு, அந்நாட்டுக்கானத் திருப்பீட தூதுவர் பேராயர் அந்தோணியோ பிராங்கோவிடம் உறுதி கூறியிருப்பதாக வத்திக்கான் அறிவித்தது. மேலும் இதனை நடத்திய லியோர் ஷெலைய்ன் என்பவர் தனது நிகழ்ச்சியில் மன்னிப்புக் கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.