2009-02-20 18:58:58

கத்தோலிக்கக் கல்விக்கு எதிராகச் செயல்படுவதை கர்தினால் கண்டிக்கிறார்.2002


கனடா நாட்டின் கியூபெக் நகரச் சமயக்கல்வித் திட்டங்கள் பெற்றோர்களின் உரிமைகளை மீறுவதாகக் கர்தினால் ஷேனன் குரோசோலவ்ஸ்கி கூறினார் .

கனடாவின் கியூபெக் மாநகரம் கல்விக்கூடங்களில் புதிய பாடத்திட்டத்தை புகுத்தியுள்ளது . அது கத்தோலிக்க மறையின் படிப்பினைப்பிக்கு எதிராக இருப்பதாக வத்திக்கான் திருப்பீட கத்தோலிக்கக் கல்விக்கான மன்றத்தலைவர் கர்தினால் ஷேனன் கூறியுள்ளார் .

கத்தோலிக்கக் கல்விக்கு அரசு நிதி அளிப்பது பற்றி உரோமையில் உள்ள திருப்பீடத்தின் அந்தோனியானும் பலகலைக்கழகத்தில் கருத்தரங்கு நடந்தது . இதை ஆக்டன் நிறுவனம் நடத்தியது . சென்ற ஆண்டு கியூபெக்கின் கல்வி அமைச்சகம் கத்தோலிக்கச் சமய , மற்றும் நன்னெறிப்பாடங்களையோ , புரோட்டஸ்டண்ட் சமயக் கல்வியையோ , பொது நன்னெறிக்கல்வியையோ இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து கொள்ளும் திட்டத்தைப் புகுத்தியது . மேலும் இத்திட்டத்தில் பல் வேறு சமயச் சிந்தனைகளும் , உலகோதயச் சிந்தனையுடைய நன்னெறிப்பாடங்களும் புகுத்தப்பட்டுள்ளன . பாடப்புத்தகங்கள் நடுநிலை வகிக்கவில்லை எனப் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர் . ஒரு கத்தோலிக்க அரசு பல்வேறு சமயங்களைப் பயிலுமாறு கூறுவது சரியல்ல எனப் கர்தினால் ஷேனன் குரோசோலவ்ஸ்கி தெரிவித்துள்ளார் .கத்தோலிக்கப் பெற்றோர்கள் மனச்சாட்சிப்படி தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் உரிமை மீறப்பட்டுள்ளது என கியூபெக்கின் கர்தினால் மார்க் குவில்லெட்டும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.