2009-02-19 15:46:28

பிரிட்டனில் 2020ம் ஆண்டிற்குள் குழந்தைகளிடையே வறுமை நிலையை ஒழிக்க மேலும் அதிக முயற்சிகள் தேவை


19பிப்.2009 பிரிட்டனில் 2020ம் ஆண்டிற்குள் குழந்தைகளிடையே வறுமை நிலையை ஒழிக்கும் திட்டத்தை செயல்படுத்த மேலும் அதிக முயற்சிகள் தேவைப்படுவதாக ஜோசப் ரோவன்ட்ரி என்ற கிறிஸ்தவ அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் வேலைவாய்ப்பின்மைகள் அதிகரித்துவருவதும் குழந்தைகளிடையே வறுமை நிலையை அதிகரிப்பதற்குக் காரணமாகவுள்ளது எனக்கூறும் இக்கிறிஸ்தவ அமைப்பு, குழந்தைகளிடையே ஏழ்மை நிலையை முற்றிலுமாக அகற்ற பிரிட்டன் அரசு ஒவ்வோர் ஆண்டும் 420 கோடி பவுண்டுகளை ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும் கூறுகிறது.

வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து மீட்க பலநூறு கோடி பவுண்டுகளை ஒதுக்க முடியக்கூடிய அரசால் ஏழ்மையை ஒழிப்பதற்கென நிதியை ஒதுக்குவது இயலக்கூடிய ஒன்றுதான் எனவும் ஜோசப் ரோவன்ட்ரி கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது.  








All the contents on this site are copyrighted ©.