2009-02-19 15:51:34

நேர்காணல் - ஒரு மூத்த தமிழறிஞரின் அனுபவம் - பாகம் ஒன்று


19பிப்.2009. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றிய பிரபலமான ஒன்பது மூத்த தமிழ் அறிஞர்களுக்கு இவ்வாண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய நாள் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கி கவுரவித்தது. இந்த திரு.வி.க. விருது பெற்ற ஒன்பது பேரும் தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதி அவர்களிடம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பெற்றார்கள். இந்த ஒன்பது பேரில் ஒருவர் கத்தோலிக்கரான தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ச.பா.அருளானந்தம் அவர்கள். 77 வயதான இவர் சென்னை இலொயோலா தன்னாட்சிக் கல்லூரியில் 37 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் இவர் தனது இல்லத்தில் வீரமாமுனிவர் பெயரில் ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார். பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினம். எனவே தாய்த் தமிழுக்கு நற்சேவையாற்றும் பேராசிரியர் முனைவர் ச.பா.அருளானந்தம் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டோம்.

RealAudioMP3

இந்த நேர்காணல் தொடரும்......








All the contents on this site are copyrighted ©.