2009-02-19 15:47:40

இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தலைவராக மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் மீண்டும் தேர்வு


19பிப்.2009. இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தலைவராக மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மைசூரில் நேற்று நிறைவுற்ற இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் கூட்டத்தில் கர்தினால் ஆஸ்வால்டு அதன் தலைவராகவும், டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சஸ்சாவோ அதன் துணைத்தலைவராகவும், விஜயவாடா ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு அதன் பொதுச் செயலராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 120 ஆயர்களும் 6 பொதுநிலைத் தலைவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை, ஒவ்வொரு கத்தோலிக்கரும் விவிலியத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அது தினமும் வாசிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

சிறுவர்கள் ஓரளவு பகுத்துணரும் பருவத்தை அடையும் போது அவர்களுக்கு விவிலியத்தை வழங்கும் விழா ஒன்று நடத்தப்பட வேண்டுமெனவும் ஆயர்கள் பரிந்துரைத்தனர்.








All the contents on this site are copyrighted ©.