2009-02-18 14:39:55

கத்தோலிக்கச் சமூகத் தொடர்பாளர்கள், பிற ஊடகவியலார்க்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கமுடியும், திருப்பீட பேச்சாளர்


18பிப்.2009. அமைதி, நீதி, ஒருங்கிணைந்த மனித ஆளுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் திருச்சபையில் பணியாற்றும் சமூகத் தொடர்பாளர்கள், பிற ஊடகவியலார்க்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கமுடியும் என்று திருப்பீட பேச்சாளர் கூறினார்.

“கத்தோலிக்க ஊடகம்- திருப்பீடத்தின் ஊடகத்துறை அனுபவம்” என்ற தலைப்பில் ஸ்பானிய ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு ஆணையத்தின் கூட்டத்தில் உரையாற்றிய வத்திக்கான் பத்திரிகை அலுவலக இயக்குனர் இயேசுசபை அருட்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி இவ்வாறு இத்திங்களன்று கூறினார்.

மனிதனின் ஒருங்கிணைந்த ஆளுமையில் நன்னெறிக்கூறுகள் பற்றிப் பேசிய அவர், உலகளாவிய தகவல் அமைப்புகளில் ஓரங்கட்டப்பட்டோர், செல்வாக்கு இழந்தோர் போன்றோரின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்.

கத்தோலிக்க சமூகத் தொடர்பை, உலகச் சமூகத் தொடர்பு சாதனங்களிலிருந்து பிரிக்க முடியாது, மாறாக மனிதனையும் அவனது பிரச்சனைகளையும் நற்செய்திப் போதனையின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அருட்தந்தை லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.