2009-02-18 14:45:06

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் போரிடுவதைத் தவிர்க்குமாறு ஐ.நா. அழைப்பு


18பிப்.2009. இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் போரிடுவதைத் தவிர்க்குமாறு ஐ.நா.நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இலங்கையின் வன்னிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பொது மக்களின் பாதுகாப்பு வலயங்கள் எனப்படும் இடங்களில் கட்ந்த வார இறுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் அதிகமான அதிகமான பேர் இறந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளதையடுத்து இவ்விண்ணப்பித்தை முன்வைத்துள்ளது ஐ.நா.நிறுவனம்.

போரிடும் இருதரப்பினரும் முறையான, மனிதாபிமானத் தீர்வைக் காண முயல வேண்டும், அப்போதுதான் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகள் மேலும் இரத்தம் சிந்துவதையும் சண்டை மற்றும் நோயின் காரணமாக உயிரிழப்பதையும் தவிர்க்க முடியும் என ஐ.நா. கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தற்போதைய போரில் சிக்கித் தவிக்கும் 2,50,000 அப்பாவி மக்களின் நிலை குறித்த கவலைகள் அதிகரித்துவரும் வேளை, பொதுமக்களுக்கு இந்தக் காலகட்டம் வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.