2009-02-17 16:22:23

காலக் கண்ணாடி , பிப்ரவரி 18 .


கி.பி . 999 பாப்பரசர் 5 ஆம் கிரகோரி இறந்தார் . இவர் ஒரு ஜெர்மானியர்.

1546 சமயப்புரட்சியாளர் மார்ட்டின் லூத்தர் 62 வயதில் இறந்தார் .

1564 புகழ் பெற்ற இத்தாலிய சிற்பி, ஓவியர் , கட்டட நிபுணர் , கவிஞர் மைக்கிள் ஆஞ்சலோ 88 வயதில் இறந்தார் .

1587 கத்தோலிக்கராக இருந்து ஆங்கில மகாராணியாக 1560-87 வரை இங்கிலாந்தை ஆட்சி புரிந்த மேரி ஸ்டூவர்ட் 44 வயதில் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார் .

1678 ஜான் பண்யன் எழுதிய புகழ் மிக்க நூல் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் வெளிவந்த நாள் .

1787 ஆஸ்திரிய மன்னன் 2 ஆம் ஜோசப் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டார் .

1885 மிகச் சிறந்த அமெரிக்கப்புதினம் கக்கில்பெரி பின் வெளி வந்தது.

1930 அமெரிக்க விஞ்ஞானி கிளைட் டோம்போ புளோட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்தார் .

1974 அமெரிக்க நாட்டின் இந்தியாவுக்கான தூதர் 204 கோடி 67 இலட்சம் டாலர்களை இந்தியாவுக்கு வழங்கினார்.

1979 சகாராப் பாலைவனத்தில் பனி மழை பெய்தது .








All the contents on this site are copyrighted ©.